பொன்னமராவதியை அடுத்த கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த கண்டியாநத்தம் புதுப்பட்டியில் உள்ள பெரிய கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தை சாமி தொடங்கி வைத்தார்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர்,திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 760 காளைகளும், 290 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டி 6 சுற்றுகளாக நடைபெற்றது.
இதை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சீறி பாய்ந்து களத்திற்கு வந்தன. சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடங்கினர்.
இதற்கிடையே சிறந்தமுறையில் காளைகளை அடங்கிய வீரர்களுக்கும், வீரங்களை திணறடித்து வென்ற களைகளுக்கும் சைக்கிள், அண்டா, பீரோ உள்ளி பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
———-கோ. சிவசங்கரன்







