கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் செய்த மணமக்கள்!

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அதிகமானோர் ஒன்றாக கூட அனுமதி மறுக்கப்பட்டதால் பலரது திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமக்கள் கொரோனா மையத்திலேயே திருமணம்…

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அதிகமானோர் ஒன்றாக கூட அனுமதி மறுக்கப்பட்டதால் பலரது திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமக்கள் கொரோனா மையத்திலேயே திருமணம் செய்து கொண்டனர்.

தாங்கள் குறித்த தேதியிலேயே திருமணம் நடக்க வேண்டும் என நினைத்த அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். மணமக்கள் PPE உடையணிந்து பாதுகாப்பாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி திருமணம் நடந்துள்ளது. மணமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் கூடுதலாக ஒருவர் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கொரோனா மையத்திலேயே நடந்த இந்த திருமண விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply