நடிகரும், பாஜக எம்.பி.,யுமான சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு!

பாஜக எம்.பி சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்…

பாஜக எம்.பி சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும் கடையடைப்பு போராட்டம் உள்ளிட்டவைகளை மேற்கொள்கின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில் நடிகரும், பாஜக எம்.பி.,யுமான சன்னி தியோல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதுதொடர்பான பிரச்சனை விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையிலானது என்றும், சிலர் இதனை பயன்படுத்திக் கொண்டு பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply