காவல் அணிவகுப்புடன் சிறுவனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காவல்துறையினர்!

அமெரிக்காவில் கொரோனாவால் தாய், தந்தையை பறிகொடுத்த சிறுவனின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராய்டன் என்ற அந்த சிறுவனின் பெற்றோர் கொரோனா பாதிப்பால் அண்மையில் உயிரிழந்தனர். அவர்கள், தனது குழந்தையின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட…

அமெரிக்காவில் கொரோனாவால் தாய், தந்தையை பறிகொடுத்த சிறுவனின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ராய்டன் என்ற அந்த சிறுவனின் பெற்றோர் கொரோனா பாதிப்பால் அண்மையில் உயிரிழந்தனர். அவர்கள், தனது குழந்தையின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

தற்போது, பெற்றோரின் இடத்தில் இருந்து சிறுவன் ராய்டனின் 5வது பிறந்தநாளை, டெக்சாஸ் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து கொண்டாடினர். வாகன அணிவகுப்பு நடத்தி, வாழ்த்து தெரிவித்த அவர்கள், சிறுவனுக்கு பரிசு மழை பொழிந்து, மகிழ்வித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply