தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள 150 இடங்களில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 49 இடங்களுடன் பாஜக இரண்டாம் இடத்தையும் அசாதுதீன் ஓவைசியின் கட்சி 42 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. அதேசமயம் மொத்தமுள்ள 150 இடங்களில் காங்கிரஸ் கட்சி இரு இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.







