கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் அஷூதோஷ்…

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் அஷூதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில், 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்தனர். புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த அவர்கள், பின்னர் அங்கிருந்து கடலூர் வந்தடைந்தனர். அங்கு மழைநீர் சூழ்ந்த விளைநிலங்கள், சேதமடைந்த சாலை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின், கடலூர் தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புயல் வெள்ள பாதிப்பு புகைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட்டு, அவர்கள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து, மத்தியக் குழுவினர், பண்ருட்டி வழியாக விழுப்புரம் சென்றனர்.

இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply