பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், எஸ்.சி பிரிவினருக்கு வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. 13ஆம் தேதி அருந்தியர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதேபோல். எஸ்.டி பிரிவினருக்கு 14ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்றால் இடம் கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியாது என்றும் மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.







