நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.
நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி கணக்கெடுக்கும் பணிக்காக வேளாண் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் 1,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயிர்களின் நிலைகள் நாளுக்கு நாள் மாறுபடும் என்பதால் அதற்கான வழிமுறைகள் படி கணக்கெடுப்பு நடைபெறுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2 அல்லது 3 நாட்களில் பயிர் கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.







