மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 88,02,267 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,53,956 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,36,696 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 41,810 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,298 பேர் குணமடைந்து உள்ளனர். 496 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 13,95,03,803 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் நேற்று மட்டும் 12,83,449 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.







