ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் டெடி..

ஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படம் வரும் மார்ச் 12ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவும், அவரின் மனைவி சயீஷாவும் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடித்துள்ள படம் டெடி.…

ஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படம் வரும் மார்ச் 12ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவும், அவரின் மனைவி சயீஷாவும் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடித்துள்ள படம் டெடி. இவர்களுடன் சதீஷ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் ரிலீஸ் திட்டத்தை டெடி மறந்துவிட்டது. நான் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன் என ஆர்யா நேற்று ஆர்யா ட்வீட் செய்திருந்தார். இதிலிருந்து படம் ஓடிடியில் தான் வெளியாகும் என ரசிகர்கள் ஓரளவு நேற்றே யூகிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் டெடி படம் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகிறது என அறிவிப்பு ஆர்யா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.