புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சரவையின் ராஜினாமை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து பெரும்பான்மை இழந்த ஆளும் கட்சியாக நாராயணசாமி தலைமையிலான அரசு மாறியது. இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 22ம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்தார். இந்நிலையில் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சரவையின் ராஜினாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். அத்துடன் இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.