புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஏனாம் தொகுதியில் போட்டியிடவில்லை.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.ஆனால் 14 தொகுதிகளின் வேட்பாளர்களை மட்டுமே அறிவித்த காங்கிரஸ் ஏனாம் தொகுதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை நம்பி தேர்தலை சந்தித்த காங்கிரஸ், இம்முறை அவர் என். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதால், காங்கிரஸ் கட்சியில் போட்டியிட யாரும் முன் வரவில்லை.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 29 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது.







