தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 1,087 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 1,087 பேராக உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு 8,64,450 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நோய்த்தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 610 ஆக பதிவாகியிருக்கிறது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,690ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,552 ஆக உள்ளது.