20வருடங்களுக்கு மேலான தனிநபரின் பழைய வாகனங்கள் வாகன சோதனையில் தோல்வியடைந்தால் அவற்றின் அங்கீகாரம் 1 ஜூன் 2024 அன்றோடு மறுக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் நேற்று வாகன அழிப்பு கொள்கையை தாக்கல் செய்தார். அதில், 20 வருடத்திற்கு மேலாக உள்ள தனி நபர் வாகனங்கள், வாகன சோதனையில் பழுதடைந்தால் அவைகளின் அங்கீகாரம் வரும் 1-ஜூன் 2024ளோடு முடக்கப்படும் என்றும் 15 வருடத்திற்கு மேலான வணிக ரீதியான வாகனங்கள், வாகன சோதனையில் பழுதடைந்தால் அவைகளின் அங்கீகாரமும் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி போன்ற சுற்றுச்சுழல் அதிகமாக மாசடையும் 10 நகரங்ளில் வாகன சோதனை சான்றிதழ் என்பது மிக அத்தியாவசியமான ஒன்று எனவும் பழுதடைந்த வாகனங்களை மறுசுழற்சி செய்யாமல் உபயோகிப்பது சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பைத் தரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன சோதனை மிக அவசியமான ஒன்றாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழுதடைந்த வாகனங்களை அழித்துவிட்டு அதற்கான சான்றிதலை காட்டி, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.







