எத்தியோப்பியாவில் ஒரே நாளில் குழந்தைகள் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் படுகொலை!

எத்தியோப்பியாவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெட்டெக்கல் மண்டலத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இதில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எத்தியோப்பியாவின் டைக்ரே…

எத்தியோப்பியாவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெட்டெக்கல் மண்டலத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இதில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியைச் சேர்ந்த மக்கள் தன்னாட்சி அதிகாரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதிக்கு ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் பெனிஷாங்குல் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply