உம்மன் சாண்டியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி – இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ராகுல்காந்தி!

உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இன்று கேரளா செல்கிறார். கேரள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்  ஒருவருமான உம்மன் சாண்டி தொண்டை புற்றுநோய்…

உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இன்று கேரளா செல்கிறார்.

கேரள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்  ஒருவருமான உம்மன் சாண்டி தொண்டை புற்றுநோய் காரணமாக பெங்களூரூ தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜூலை 18ஆம் தேதி காலமானார். பெங்களூருவில் அவரது உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அவரது உடல்  திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்நது தலைமைச்செயலகம், மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்டது.

பின்னர் அவரது உடல் கோட்டயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மறைந்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், உம்மன் சாண்டியின் சொந்த ஊரான புதுப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று 2 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.