இன்று சென்னை வந்தடைகிறது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைப்பு…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடருக்கான கோப்பை இன்று சென்னை வந்தடைகிறது. ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம்…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடருக்கான கோப்பை இன்று சென்னை வந்தடைகிறது.

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்தத் தொடருக்கான கோப்பை அறிமுக விழா டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. பின்னர் டெல்லி, சண்டிகர், குவாஹாட்டி, பாட்னா, புவனேஸ்வர், ராஞ்சி, பெங்களூரு, மற்றும் திருவனந்தபுரம் பல நகரங்களுக்குக் கோப்பை அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கோப்பை இன்று சென்னை வந்தடைகிறது. கோப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. நிகழ்வில் ஒலிம்பியன்கள், ஹாக்கி இந்தியா சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  அதன் பின் தமிழ்நாடு முழுவதும் இந்த கோப்பை வலம் வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.