இலங்கை, வங்க தேசம் இடையிலான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி யாருக்கு?

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்க தேசம் அணிகள் 1-1 என்ற புள்ளியில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இலங்கையில் நாளை நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டியில் வங்கதேச மகளிர்…

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்க தேசம் அணிகள் 1-1 என்ற புள்ளியில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இலங்கையில் நாளை நடைபெற உள்ளது.

முதல் டி20 போட்டியில் வங்கதேச மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் 2 வதாக களமிறங்கிய இலங்கை அணி 129 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. தற்போது இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் உள்ளன.

இந்நிலையில் நாளை 3 வது இலங்கையில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை இலங்கை மண்ணில் வங்கதேச மகளிர் அணி டி20 தொடரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.