அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதி சேர்ந்த இளைஞர் செல்வராஜ் என்பவர் குடிபோதையில், அரசு பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, கற்களை கொண்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வராஜை கைது செய்தனர். இதுகுறித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றதில் நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து, நீதிபதி விஜயா தீர்ப்பு வழங்கினார் அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி செல்வராஜ்க்கு 4 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனையும பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.







