”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!

அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கொரோனாவைக் கண்டு பயப்படாமல் மக்களை நேரடியாக சந்தித்து சேவையாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…

அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கொரோனாவைக் கண்டு பயப்படாமல் மக்களை நேரடியாக சந்தித்து சேவையாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலம் பொற்காலமாக திகழ்ந்ததாக தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் வழியில் தொடர்ந்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருவதாக கூறிய அவர், அதிமுகவில் தொண்டர்கள் தான் தலைவர்களின் வாரிசு என்றும் பேசியுள்ளார்.

கொரோனாவை கண்டு பயப்படாமல் மக்களை நேரில் சந்தித்து சேவையாற்றி வருவதாகவும், ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இருந்து கொண்டு தமிழக அரசை வேண்டுமென்றே திட்டமிட்டு குறைகூறி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply