கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிலர் வேலைக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் உணவு விடுதியில் பணியாற்றிய கல்லூரி மாணவி ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதான ஜியானா, செவிலியர் கல்வி படித்து வருகிறார். படித்துக் கொண்டே உணவு விடுதியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜியானா உணவு பரிமாறியுள்ளார். இந்நிலையில் அவர் தனது 15 ஆயிரம் ரூபாய் பில்லுக்கு, 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். கல்வியை தொடர உதவிய கஸ்டமருக்கு, ஜியானா நன்றி தெரிவித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது உதவும் மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.







