ஆசிரியர் தேர்வு இந்தியா

பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்

இன்று நடைபெற உள்ள போராட்டத்தின்போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜெய்ப்பூர் – டெல்லி சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் மற்ற சாலைகளும் படிப்படியாக மறிக்கப்படும் என்றும், பாரதிய கிசான் சங்கத் தலைவர் பல்வீர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

எனினும், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து வரும் நாளை மறுநாள் பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும், பல்வீர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

எல்.ரேணுகாதேவி

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

Jeba

போலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா

Jeba

Leave a Reply