முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

இன்று வெளியாகும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் – ஆர்ஆர்ஆர் இடம்பெறுமா?

இன்று வெளியாகவுள்ள ஆஸ்கர் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுமா? என்று திரையுலகினர் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது.

இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த பாடல், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த விஎஃப்எக்ஸ், சிறந்த ஒலி என 6 பிரிவுகளில் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே அமெரிக்க நாளிதழ் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி 7.00 மணிக்கு ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று வெளியாக இருக்கிறது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் திரையுலகமும் ரசிகர்களும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்; பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

Halley Karthik

“தமிழ்நாடு முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும்”- ஆளுநர் தமிழிசை

G SaravanaKumar

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் – டி.டி.வி.தினகரன்

Web Editor