யூடியூப் ட்ரெண்டிங் 2022 தரவரிசையில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ பாடல்கள் முன்னிலை வகுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ரசித்த மிகவும் பிரபலமான வீடியோக்கள் யூடியூப் இந்தியா திரும்பிப் பார்க்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தெலுங்கு திரைப்படமான புஷ்பாவின் இசை மற்றும் வீடியோக்கள் மற்றும் தமிழ் திரைப்படமான பீஸ்ட் ஆகியவை டிரெண்டிங் வீடியோ பட்டியல்களில் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளன.
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா போன்றவர்கள் நடித்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த புஷ்பாவின் ஹிட் சவுண்ட்டிராக் ஸ்ரீவள்ளி, சாமி சாமி மற்றும் ஊ அண்டாவா மாவா உள்ளிட்ட பாடல்கள் டாப் 5 இல் இடம்பிடித்துள்ளது. இதற்கிடையில், விஜய் நடித்து அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த பீஸ்ட் படத்தின் அரேபி குத்து பாடலும் டாப் 5 இல் இடம்பிடித்துள்ளது.
அப்படி டாப் 5 இல் இடம்பிடித்த பாடல்களை தற்போது பார்ப்போம்:
1. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் ஸ்ரீ வள்ளி பாடல் முதல்நிலை வகுத்துள்ளது.
2. விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
3. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி சாமி பாடல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
4. மேற்கு வங்காள நிலக்கடலை விற்பனையாளரான பூபன் பதியாகர் பாடிய கச்சா பாதாம் என்ற பாடல் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
5. கேசரி லால் யாதவ், ஷில்பி ராஜ் ஆகியோர் பாடிய லெ லெ ஐ கொக்கா கொலா பாடல் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.