ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயன்ற வடமாநில இளைஞர், மெஷினுக் குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் நள்ளிரவில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத் தின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வட மாநில இளைஞர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
ஏடிஎம் இயந்திரத்தின் பின்புறம் ஓட்டையிட்டு உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருட முயன்ற போது, அந்த இளைஞர் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட போலீசார் அந்த வட மாநில இளைஞரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.
விசாரணையில் அவர் பீகார் மாநிலம் கிழக்கு சாம்ரான் பகுதியை சேர்ந்த உபேந்திர ராய் (28) என்பதும் மோகனூர் அருகே தனியாருக்கு சொந்தமான கோழித் தீவன ஆலையில் மூட்டை தூக்கம் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இதன் பின் அந்த வட மாநில இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர், ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த ரூ. 2.65 லட்சம் தப்பியது குறிப்பிடத்தக்கது.








