முக்கியச் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 78 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 432 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் அந்த அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் நிதானமாக ஆடினர். பொறுமையாக ஆடிய கே.எல்.ராகுல் 8 ரன் எடுத்தபோது ஓவர்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். ரோகித் அரைசதம் கடந்த நிலையில், ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 156 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் எடுத்தார்.

பின்னர் புஜாராவுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 91 ரன்களுடனும் கேப்டன் கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 189 பந்துகளை சந்தித்து 91 ரன்கள் எடுத்தார். இதையத்து விராத் கோலியுடன் ரஹானே இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், 55 ரன்கள் எடுத்திருந்த விராத் கோலி ஆட்டமிழந்தார். பின்னர் ரஹானேவுடன் ரிஷப் பன்ட் இணைந் தார். ரஹானே 10 ரன்களிலும் பன்ட் ஒரு ரன்னிலும் ஜடேஜா 30 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இவர்களுக்கு பின் வந்தவர்களும் நிலைக்கவில்லை.

இதனால், இந்திய அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 4 வது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 2 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

Gayathri Venkatesan

லாபத்தை அள்ளும் ஹிமாச்சல் செரி!

Vandhana

கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி!

Halley karthi