முக்கியச் செய்திகள் சினிமா

’இது எனக்கு மறுபிறவி’: நடிகர் வடிவேலு மகிழ்ச்சி

தன் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது குறித்து, ’இது எனக்கு மறுபிறவி’ என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

’இம்சை அரசன் 24ம் புலிகேசி’படத்தின்போது இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் விதித்தது. இதனால் அவர் வேறு படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இம்சை அரசன் படப் பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில், பிரச்னை சுமுகமாக முடிந்து, வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டது.

இதையடுத்து நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க தயாராகியுள்ளார். அவர் ஹீரோவாக நடிக் கும் ’நாய்சேகர்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார்.

இந்நிலையில் தன் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது குறித்து, வடிவேலு கூறும் போது, ’இது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்க இருக்கிறேன். இந்த சந்தோஷத்தில் 20 வயது குறைந்தது போல் இருக் கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளேன். தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடித்து விட்டு, பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடிக்க இருக்கிறேன்’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

“ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா” – முதலமைச்சர்

Halley karthi

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 4-ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம்!

Vandhana

எளிமையாக நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

Saravana