கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைது

கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு…

கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து
வருகிறார். குப்பத்தாமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நர்சிங் கல்லூரி மாணவி யாஷினி. இவர் கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

அப்பொழுது திருவலம் காவல் நிலையம் சாலையில் உள்ள தனது தோழியிடம் பேசிக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் நீண்ட நேரமாக நோட்டமிட்டு கொண்டிருந்த சதீஷ் திடீரென ஓடிச் சென்று யாஷினியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து யாஷினியின் கழுத்து முகம் உங்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குத்தி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் யாஷினி நிலைகுலைந்து சம்பவ இடத்தில் மயக்கம் அடைந்து விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தாக்குதலில் ஈடுபட்ட சதீஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த யாஷினியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிபட்ட சதீஷிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சதீஷூம், யாஷினியும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக காதலித்து வந்ததாகவும் இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரம் அடைந்த சதீஷ் யாஷினியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்த யாஷினி வேலூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். காவல் நிலையம் மிக அருகாமையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்செய்யும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.