சேலத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடம்பூரைச் சேர்ந்த ராமர் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் பெற்றோரிடம் ராமர் பெண் கேட்டுள்ளார்.
பெண் கேட்டு தராததால் கோபமடைந்த ராமர், பள்ளிக்கு சென்ற மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இரண்டு நாட்களாகியும் மகள் வீடு திரும்பாததால் பதறி போன தந்தை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். பின்னர், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







