திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலும் வன்முறையும் தலைவிரித்தாடும் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 7 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு தத்தளித்து வருகிறது.
தமிழகம் வெற்றிநடைபோடுகிறது என்று முதல்வர் கூறிவருவது பொய்யான ஒன்று என தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டச்செயலாளர்தான் காவல் ஆய்வாளராக இருப்பார் என்று விமர்சித்தார். அத்துடன் மாதம் தோறும் பணம் கொடுப்பதாக கூறி தாங்கள் ஏமாற்ற மாட்டோம் என்றும், ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.







