சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு…

சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பவானி காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் பவானியில் தனியார் உணவகத்தில் தங்கி வேலை பார்க்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்தும், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாலிபரை பவானி காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளைஞர் அருண்குமாரை கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.