பெல்ட்டில் தங்கம் கடத்த முயற்சி; சிக்கியது எப்படி?

மும்பை விமான நிலையத்தில் பெல்டில் வைத்து 12 கிலோ தங்கம் கடத்த முயன்ற சூடான் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை…

மும்பை விமான நிலையத்தில் பெல்டில் வைத்து 12 கிலோ தங்கம் கடத்த முயன்ற சூடான் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தில் உள்ள பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது சூடான் பயணி ஒருவர் நடத்தை சந்தேகப்படும்படியாக இருந்தது. இதனையடுத்து அவரிடன் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவரை சுற்றியிருந்த பயணிகள் அவர் தப்பித்து செல்லும் விதமாக சலசலப்பை ஏற்படுத்தினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்து விசாரித்தனர்.

https://twitter.com/mumbaicus3/status/1568809082437664770

அப்போது சூடான் பயணி அணிந்திருந்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டில் இருந்து ரூ.5.38 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்வபம் தொடர்பாக 6 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு 5.38 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.