பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனம் – அமெரிக்காவில் இளைஞர் சாதனை!

அமெரிக்காவில் பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.  அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கேஒய்.மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் இரு சக்கர வாகனம் ஒன்றை உருவாக்கி அனைவரது கவனத்தையும்…

அமெரிக்காவில் பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். 

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கேஒய்.மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் இரு சக்கர வாகனம் ஒன்றை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த வாகனத்தில் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுவிற்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாகனத்தில் உள்ள என்ஜின் பீரை 300 டிகிரி வரை சூடாக்கி, பின்னர் அதனை நீராவியாக மாற்றி பைக்கை முன்னோக்கி நகரச் செய்கிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வாகனம் குறித்து மைக்கல்சன் கூறியதாவது:

”நான் குடிப்பதில்லை. அதனால் மதுவை எரிபொருளுக்கு பதிலாக பயன்படுத்துவதை விட வேறு எதையும் என்னால் நினைக்க முடியவில்லை. இந்த வாகனம் இதுவரை சாலையில் கொண்டு செல்லவில்லை, ஆனால் பீர் மூலம் இயங்கும் இந்த வாகனம் சில உள்ளூர் கார் ஷோக்களில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த மோட்டார் சைக்கிள் மணிக்கு 240 கிமீ வேகத்தை எட்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்று கூறினார்.

இவரது திறமைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது முந்தைய கண்டுபிடிப்புகளான ராக்கெட்-சக்தி கழிப்பறை மற்றும் ஜெட்-சக்தி காபி பாட் ஆகியவை வரிசையில் இந்த பீர் மூலம் இயங்கும் வாகனமும் இடம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.