8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ரபியூல் மாண்டேல் என்ற இளைஞர் கடந்த 2019ம்…

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ரபியூல் மாண்டேல் என்ற இளைஞர் கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றமான மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் நீதிபதி மாலதி இன்று தீர்ப்பினை வழங்கினார். தீர்ப்பின்படி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சித்திரவதை செய்த ரபியூல் மாண்டேலுக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டனையும், அபராதத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை செலுத்திட வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத கால மெய்க்காவல் தண்டனையையும் அனுபவித்திட வேண்டுமென்று அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை பெற்றுத் தர மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply