கேரளாவை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த செங்காட்டூர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கமல்ஹாசன் கூறுவது தவறானது என்று தெரிவித்தார். கமல்ஹாசன் எப்போதும் பெரிதாக பேசும் கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தமிழகத்தை விட 3 மடங்கு அதிகம் நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். அதனால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுவது நியாயமற்றது என்றும் விளக்கமளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கமல் முதலில் கிராம சபை கூட்டம் நடத்தியதாகவும், அதனை காப்பி அடித்து தற்போது ஸ்டாலின் அதனை செய்து வருவதாகவும் விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலினுக்கு காப்பி மட்டுமே அடிக்க தெரியும் என்றும் பேசியுள்ளார். ஸ்டாலினுக்கு மத்திய அரசும் தெரியாது, மாநில அரசும் தெரியாது, பஞ்சாயத்து பற்றியும் தெரியாது என்று கூறியுள்ளார். கிராமசபை கூட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவர் நடத்த வேண்டும், அதைப்பற்றியெல்லாம் அவருக்கு தெரியாது என்றும் விமர்சித்துள்ளார்.