முக்கியச் செய்திகள் விளையாட்டு

அணியில் இடம் கிடைக்காத சோகம்: எல்லாம் மாறும் என கூறிய இளம் வீரர்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது.

ஜூன் மாதம் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஷிகர் தவன், சஞ்சு சாம்சன் ஆகிய அதிரடி வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்குக்கு இந்தத் தொடரில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 14 ஆட்டங்களில் விளையாடி 361 ரன்கள் குவித்த நிதீஷ் ராணாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனால், ஏமாற்றம் அடைந்த 28 வயது வீரர் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டார்.
அந்தப் பதிவில், “இதெல்லாம் விரைவில் மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதீஷ் ராணா, ஷிகர் தவண் தலைமையிலான இந்திய அணியில் கடைசியாக விளையாடினார். டி20 தொடரில் பெரிய அளவில் ஸ்கோர் எதுவும் அவர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில், டுவிட்டரில் ஒரு பதிவை அவர் வெளியிட்டார். அந்தப் பதிவில், “நமது சமூக வலைதளம் வெற்றிகளை மட்டும் பகிர்வதற்கான இடம் கிடையாது. தோல்விகளையும் நாம் அங்கே பதிவு செய்யலாம். நான் எதிர்பார்த்த அளவுக்கு இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணம் அமையவில்லை. அதிர்ஷ்டத்தை விட அதிக கடின உழைப்பை நான் நம்புகிறேன். அது என்னை ஒருபோதும் நிறுத்தாது” என்று கூறியிருந்தார்.
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல் உள்ளிட்ட வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!

Web Editor

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

G SaravanaKumar

டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Gayathri Venkatesan