மெட்டா நிறுவனமான வாட்ஸ்அப்பின் சில வசதிகள் iOS இயங்குதளத்தின் பழைய பதிப்பு கொண்ட போன்களில் வேலை செய்யாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயனர்களுக்கு அதிகரித்துவரும் எதிர்பார்ப்பு, மாறிவரும் டிரெண்டுகள், சமீபத்தில் புதுப்பிப்புகள் ஆகியவற்றை செய்வதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் அவ்வப்போது இவ்வாறு செய்கின்றன. இதை வைத்தே சில iOS பயனர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவை வாட்ஸ்அப் திரும்பப் பெற திட்டமிட்டு வருகிறது.
iOS 10, iOS 11, ஐபோன்5சி மற்றும் ஐபோன்5 ஆகிய சாதனங்களில் வாட்ஸ்அப்பின் சில அம்சங்கள் வேலை செய்யாமல் போகும். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னு்ம வெளியாகவில்லை. வாட்ஸ்அப்பின் எந்த அம்சங்கள் வேலை செய்யாமல் போகும் என்பது குறித்தும் இதுவரை சரியான தகவல் வெளியாகவில்லை. ரியாக்ஷன்ஸ் அல்லது பேமென்ட் செய்யும் வசதி இதில் ஒன்று வேலை செய்யாமல் போகலாம் என்று தெரிகிறது. இனி வரும் மாதங்களில் iOS 10, iOS 11, ஐபோன்5சி மற்றும் ஐபோன்5 ஆகிய போன்களுக்கு அளித்துவரும் ஆதரவை வாட்ஸ்அப் திரும்பப் பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்டுகள் கொண்டு வருவதற்காகவும், பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பதற்காகவும் மட்டுமே வாட்ஸ்அப் நிறுவனம் இவ்வாறு செய்யவுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள மாடல் ஐபோன்களில் இந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படாது என்று வாட்ஸ்அப் டிராக்கர் தகவல்படி தெரியவந்துள்ளது.
வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட்ட பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள ஐபோன்களில் வாட்ஸ்அப்பின் அனைத்து அம்சங்களும் வேலை செய்யாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.







