என் வாழ்நாளில் என் மனத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஜெய் பீம் எனவும், அந்தப்படத்தை பார்த்து 2 நாட்கள் தான் தூங்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள திருவாடுதுறை ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெற்ற, முத்தமிழ் பேரவையின் 41-ஆம் ஆண்டு இசை விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளை அவர் வழங்கி சிறப்பித்தார்.
திரைப்பட இயக்குநர் த.செ. ஞானவேலுக்கு இயல் செல்வம் விருதையும், பாரதியாரின் கொள்ளு பேரன் ராஜ்குமார் பாரதிக்கு இசை செல்வம் விருதும் வழங்கினார். மேலும், பத்மஶ்ரீ ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பத்மஶ்ரீ காலீஷாபி மெஹபூப் ஆகியோருக்கு ராஜ ரத்னா விருதை வழங்கினார்.
தொடர்ந்து, பத்ம விபூஷன் விபி தனஞ்செயன் மற்றும் பத்மவிபூஷன் சாந்தா தனஞ்செயன் ஆகியிருக்கும் நாட்டிய செல்வம் விருதையும், நாதஸ்வர செல்வம் விருதையும் நாகேஷ் பு பப்பநாடுவுக்கும் தவில் செல்வம் விருதை ராதாகிருஷ்ணன் விருதையும் வழங்கினார். அதனைத்தொடர்ந்து பேசிய திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல், பழங்குடி இன மக்கள் சார்பாக நன்றி சொல்ல வந்ததாகவும், ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த ஆக சிறந்த அங்கீகாரம், பழங்குடி மக்களுக்கு பட்டாவும், சாதி சான்றிதழ் வழங்க முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு தான் என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை; 3 பேர் அதிரடி கைது’
அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், என் வாழ்நாளில் என் மனத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஜெய் பீம், அந்தப்படத்தை பார்த்து 2 நாட்கள் தான் தூங்கவில்லை எனவும், சிறை சாலை சித்திரவதையை தான் உண்மையில் அனுபவித்தவன் அதனால், அந்த படம் என்னை கூடுதலாக பாதித்தது என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








