”முதல் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வேன்”- அமைச்சர் பாண்டியராஜன்!

கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, விரைவில் குணமாகி தமிழகத்தற்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். திருவேற்காடு அருகேயுள்ள அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன்…

கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, விரைவில் குணமாகி தமிழகத்தற்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

திருவேற்காடு அருகேயுள்ள அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் 51 மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும், என்று அறிவித்தார். மேலும், மருத்துவர் என்ற முறையில் அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போடும்போது நாங்கள் முதல் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை, தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு கடைப்பிடித்தால், விரைவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகும் என்றும், அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்திற்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply