வாங்கிய முதல் லாட்டரியில் இளம்பெண்ணிற்கு கிடைத்த ஜாக்பாட்!! இவ்வளவு கோடியா?

கனடாவில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு முதல் லாட்டரி டிக்கெட்டிலேயே ரூ.390 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையை அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில், தனது…

கனடாவில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு முதல் லாட்டரி டிக்கெட்டிலேயே ரூ.390 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

ஒரு மனிதனின் வாழ்க்கையை அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில், தனது மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி டிக்கெட் வாங்கிய கேரள தம்பதியருக்கு ரூ.25 கோடி பரிசு காத்திருந்தது. இதேபோல் லாட்டரி டிக்கெட் பலரின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுத்துள்ளது. சில பேர் அதிர்ஷ்ட தேவதை நம் வீட்டு கதவை தட்டாதா என்று லாட்டரி வாங்கி சீரழிந்த சம்பவங்களும் நிறைய உண்டு.

இந்நிலையில் கனடா நாட்டில் ஒரு பெண்ணிற்கு அதிர்ஷ்ட தேவதை வீட்டு கூரையை பிய்த்துக் கொண்டு பணத்தை கொட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த 18 வயதான இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாளன்று ஷாப்பிங் சென்றுள்ளார்.

அப்போது,  அவரது தாத்தாவின் அறிவுரையின் பேரில், அவர் ஒரு லாட்டரி சீட்டைப் வாங்கியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட் தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்குத் தெரியாது. தற்போது அந்த லாட்டரி டிக்கெட் அவரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்துள்ளது. அந்த லாட்டரியின் மூலம் ரூ.396 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், எனது தாத்தா கூறியதால் விளையாட்டாக லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினேன். இது நான் வாங்கிய முதல் லாட்டரி டிக்கெட். ஆனால் லாட்டரியில் 48 மில்லியன் டாலர் எனக்கு கிடைத்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.