‘காந்தி வழில நீங்க… நேதாஜி வழில நான்!’ – ‘இந்தியன்-2’ டிரெய்லர் வெளியானது

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகி வலைதளங்களில் அதிக வியூசை குவித்து வருகிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில்…

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகி வலைதளங்களில் அதிக வியூசை குவித்து வருகிறது.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில், அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை பிரமாண்டமாக அமைந்துள்ளது.

மேலும், ட்ரெய்லரில் நடிகர் கமல்ஹாசன், “இது இரண்டாவது சுதந்திரப் போர்.. காந்தி வழியில் நீங்கள்..நேதாஜி வழியில் நான்” என மாஸான டயலாக் பேசுகிறார். இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.