ஆர்ஜூன் தாஸுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்?

நடிகர் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.…

நடிகர் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதனையடுத்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்திலும் நாயகியாக நடித்தார். தொடர்ந்து விஷ்ணுவரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதிதி தனது அடுத்த படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படம் ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி என்றும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ’ஹிருதயம்’ என்ற மலையாள படத்திற்கு இசையமைத்த ஹிஷாம் என்பவர் தான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம்வருபவர் அர்ஜூன் தாஸ். அர்ஜூன் நடிப்பில வெளிவந்த அநீதி உள்ளிட்ட சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அதிதியுடன் அவர் நடிக்கும் படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.