சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு நாளை ரூ.5 கட்டணத்தை செலுத்தி, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துகொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் கடந்த 3-ம் தேதி…

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு நாளை ரூ.5 கட்டணத்தை செலுத்தி, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துகொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் கடந்த 3-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அன்று முழுவதும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (பேடிஎம், வாட்ஸ்அப், போன்பே) முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் ரூ.5 என்ற சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக அன்று இச்சலுகையை பலரால் பயன்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், இந்த கட்டண சலுகை வரும் 17-ம் தேதி (நாளை) மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் மக்கள் பயணம் செய்யலாம். மக்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது.

க்யூஆர் பயணச்சீட்டு, பேடிஎம், ஃபோன் பே பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே ரூ. 5 கட்டணச் சலுகை என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

எனவே, மக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.