“டெக் மஹிந்த்ரா” நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மன் சிதம்பரம் பொம்மை நாயகி படத்தினை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் பொம்மை நாயகி. ஷான் இயக்கிய இந்தப் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பரியேறும் பெருமாள், கபாலி, ஜெய் பீம் படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை சுபத்ரா, யோகிபாபுவின் மனைவியாக நடித்துள்ளார். அறிவு, கபிலன், இளையகம்பன் உள்ளிட்டோர் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள். சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு ஜீ5 தளத்தில், கடந்த 10-ம் தேதி வெளியனது.
இந்த நிலையில் பிரபல மஹிந்த்ரா நிறுவனத்தின் துணை நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மன் சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது..
https://twitter.com/iYogiBabu/status/1638172310103523328
” தமிழ் படம் பொம்மைநாயகி படத்தை பார்த்தேன். பாதுகாப்பற்ற மக்கள் நீதியைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டும் அற்புதமான திரைப்படம் இது. இப்படத்தின் இயக்குனர் ஷானுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டினை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பொம்மை நாயகி படத்தின் நடிகர் யோகி தனது டிவிட்டட்ர் பக்கத்தில் பகிர்ந்து நன்றியினை தெரிவித்துள்ளார்.







