யோகி பாபு – மாதம்பட்டி ரங்கராஜின் ‘#MissMaggie’ டீசர் வெளியானது!

யோகி பாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடிக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியானது. மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி…

யோகி பாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடிக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியானது.

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார். தற்போது யோகி பாபுவுடன் இணைந்து மிஸ் மேகி படத்தில் நடித்துள்ளார். மிஸ் மேகி படத்தில் பெண் வேடம் உள்பட பல்வேறு தோற்றங்களில் யோகி பாபு நடித்துள்ளார். நடிகை ஆத்மிகா இப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லதா ஆர்.மணியரசு இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர், முதல் பாடல், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.