#SK21 | 9 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்த ‘அமரன்’ வீடியோ – இணையத்தில் வைரல்!

அமரன் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் அறிமுக வீடியோ வெளியாகி 9 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21-ஆவது திரைப்படம்…

#SK21 | 'Amaran' video crossed 10 lakh views in 9 hours - Viral on the Internet!

அமரன் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் அறிமுக வீடியோ வெளியாகி 9 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21-ஆவது திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவம் – தீவிரவாதிகளுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டப்பிங் மற்றும் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் ‘அமரன்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த சூழலில், ‘அமரன்’ திரைப்படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் Heart of AMARAN இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்தவகையில், சாய் பல்லவியின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி 9 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் உண்மைச்சம்பவம் என புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.