முக்கியச் செய்திகள் தமிழகம்

கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்

கண்தானத்தை வலியுறுத்தி கண்களைக் கட்டிக்கொண்டு 27 வகையான ஆசனங்களை 118 பேர் செய்து உலக சாதனை நிகழ்த்தினர்.

விருதுநகரில் இன்று சென்னை ஆக்னா மற்றும் விருதுநகர் அனாதா ஆகிய தனியார் யோகா நிலையங்கள் இணைந்து கண் தானத்தை வலியுறுத்தும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 27 வகையான யோகாசனம் செய்யும் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக திருச்சி, தஞ்சாவூர், கோவில்பட்டி, விருதுநகர், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலிருந்தும் 5 வயது முதல் 75 வயது வரை உள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை என மொத்தம் 118 பேர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு பத்மாசனம்/உட்கடாசனம், ஆர்தா சக்கராசனம், ஆர்தகாரி சக்கராசனம், வீரபத்ராசனம், சசங்காசனம், ஏக்பாத ராஜகா போடாசனம், உள்ளிட்ட 27 வகையான ஆசனங்களை 20.37 நிமிடங்களில் செய்தனர்.

இதுவரை கண்தானத்தை வலியுறுத்தி பல்வேறு வயதுடையோர் ஒரே இடத்தில் கூடி கண்களை கட்டிக்கொண்டு 27 வகையான யோகாசனத்தை செய்ததில்லை என்பதால் உலக சாதனை புத்தகமான நோபிள் வேல்டு ரெக்கார்ட்ஸ் இந்த சாதனையை அங்கிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram