நீண்ட கால துயரம் இன்று முடிவுக்கு வந்தது என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித் துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி, சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லியில் மர்மமான முறையில் நட்சத்திர விடுதியில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சசி தரூர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் சசிதரூர் எம்.பியை இன்று விடுவித்தது.
இது தொடர்பாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள சசிதரூர், தன்னை விடுவித்து உத்தரவிட்ட டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கீதாஞ்சலி கோயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
என் மனைவி மறைவுக்கு பின்னர் என்னைச் சுற்றி சூழ்ந்து இருந்த துயரங்களுக்கு ஒரு முடிவாக தீர்ப்பு அமைந்துள்ளது. எனக்கு நீதித்துறை மீது இருந்த நம்பிக்கை காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை என்மீது முன்வைத்த போதிலும் அவை அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டேன் என தெரிவித்துள்ள சசி தரூர், இந்த வழக்கில் வாதிட்டு அதனை முடிவுக்கு கொண்டுவந்த தன் வழக்கறிஞர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளர்.







