சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி விடுவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பியாக இருப்பவர் சசி தரூர். இவர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து டெல்லி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், வழக்கில் இருந்து சசிதரூரை விடுத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை கேட்டதும் நீதிபதிக்கு சசிதரூர் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.








