ஓடிடியில் வெளியானது ‘யாத்ரா 2’ திரைப்படம்!

நடிகர் ஜீவா,  மம்மூட்டி நடித்துள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை,  ‘யாத்ரா’ என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது.  இதில் ராஜசேகர ரெட்டி…

நடிகர் ஜீவா,  மம்மூட்டி நடித்துள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை,  ‘யாத்ரா’ என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது.  இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.  இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா-2’ என்ற பெயரில் உருவாகி உள்ளது.

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.  இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகியது.  இந்த நிலையில், இத்திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

https://twitter.com/JiivaOfficial/status/1778703543140278317?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1778703543140278317%7Ctwgr%5E179d9073970aec393291e5f28863fae56efce1c9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pinkvilla.com%2Fentertainment%2Fsouth%2Fyatra-2-ott-release-heres-when-and-where-you-can-watch-mammootty-jiiva-starrer-political-thriller-1294862

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.